ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர்- கனிமொழிசோமு

திருவாரூரில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் முதல்வர் கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திலும், கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் காலகட்டத்தில் அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பு என்றும், யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலினை வேட்பாளராக நினைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், இடைக்கால பட்ஜெட் முடிந்த பிறகு கூட்டணி தொடர்பாக பேசலாம் என முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் கூறினார். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி