திருத்துறைப்பூண்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை ஒட்டி திருத்துறைப்பூண்டியில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கேரள மாநில இஸ்லாமியர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி