நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு மதுவனேஸ்வரர் கோவில், மாப்பிள்ளைக்குப்பம் கைலாசநாதர் கோவில், அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில், சொரக்குடி அய்யனார் கோவில், மூங்கில் குடி கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.