திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அடிமனையில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போா் மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும், புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் 25 சதவீத தொகை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகே கிராம மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆா்ப்பாட்டம் மூலம் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர்.