கூத்தாநல்லூர் அருகே கீழ்பாதி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மின் வினியோகம் செய்வதற்காக பொருத்தப்பட்டுள்ள மின் கம்பிகள் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் லாரி போன்ற நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது மின் கம்பியோடு உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, மின் கம்பிகளை சீரமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.