மன்னார்குடி: தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை, கூணமடை பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடியிருப்புகளுக்கும் விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், நெல் மூட்டைகளுடன் செல்லும் லாரிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வயல்களின் நடுவே கைகளுக்கு எட்டும் தூரத்தில் செல்லும் இந்த மின்கம்பிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி