மன்னார்குடியில் பல்லக்கில் உலா சென்ற ராஜகோபாலசுவாமி

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி பதினெட்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். நாள்தோறும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. 

மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மடங்கள் மண்டபங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு இரவு ஆலயத்தை சென்றடைந்த பின்னர், காலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பள்ளத்தில் வீதி உலா நடைபெறும். இன்று (மார்ச் 22) காலை நடைபெற்ற பல்லாக்கு சேவையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி