நன்னிலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

குடியிருப்பு மனை இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கரன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி