திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் கடந்த மாதம் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள், விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், இன்று (டிசம்பர் 27) சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.