நீடாமங்கலத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்த தனியார் பள்ளி

நீடாமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் கல்வி அறக்கட்டளை மூலம் நீடாமங்கலம் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கத்தொகையும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி பாராட்டினார். 

விழாவினை பள்ளி தாளாளர் நீலன் அசோகன், முதல்வர் குணசீலன், செயலாளர் சுரேஷ் அசோகன் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி