வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா 100 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 2700 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மரக்கன்றுகள் கிராம சாலைகளின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படும். வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, ரமணி ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணியைத் துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி