திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிப்பந்தல், நல்லமாங்குடி, சன்னாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர் மின்தடை ஏற்பட்டது. காலை முதல் பத்து முறைக்கு மேலாக மின்சாரம் விட்டு விட்டு வந்ததாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு இவ்வாறு தான் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் கடும் அவதி அடைந்து வருவதாகவும், இது குறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.