திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட செம்மங்குடி கிராமத்தில் ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது விநியோக கட்டிடத்தையும், அதம்பார் ஊராட்சி ஸோத்திரியம் பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர பொது விநியோக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.