திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அ.தி.மு.க தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே தலா 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வென்றுள்ள இந்தத் தொகுதியில், கடந்த தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.