திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் நேற்று டாட்டா ஏசி வாகனத்தில் பால் ஏற்றி திருவாரூர் முதல் கும்பகோணம் வரை சாலையில் வந்துள்ளார். அப்போது வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் பொலிரோ காரில் திருவாரூர் கும்பகோணம் சாலையில் மூலங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பால் ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தை முந்த முயன்றுள்ளார். இந்த நிலையில் பொலிரோ டாட்டா ஏசி வாகனத்தில் உரசியதால் டாட்டா ஏசி வாகனம் நிலைதடுமாறி மூலங்குடி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள சாமிதாஸ் என்பவரின் ஓட்டு வீட்டில் புகுந்தது. இதனால் ஓட்டு வீட்டின் முன் பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து குடவாசல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.