நேற்று இரவு 8 மணி அளவில் ஆனந்தன் நன்னிலம் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த நிலையில் தண்ணீர் அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஆனந்தன் கீழே சாய்ந்து விழுந்துள்ளார். இந்த நிலையில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட ஆனந்தனின் மனைவி சுமதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆனந்தனின் மனைவியிடம் "கணவன் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை" என்பதை காவல் நிலையத்தில் பதிவு செய்து பிறகு பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்தன் உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!