மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கனரக வாகனங்களுக்கான வருடாந்திர தகுதி சான்றிற்கான கட்டணத்தை பல மடங்காக உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கட்டண உயர்வுக்கு கால நீட்டிப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.