வடுவூரில் கருட வாகனத்தில் கோதண்ட ராமர் உலா

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள வைணவத்தலமான கோதண்ட ராமர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் கோதண்ட ராமர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி