செல்லூரில் 186 அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி

குடவாசல் அருகே செல்லூரில் உள்ள எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 186 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மாணவர்களுக்கு முதன் முதலில் மடிக்கணினி வழங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்றும், மாநிலத்திலேயே முதல் முதலாக கணினி மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றி காட்டியவர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, விவசாயத்தில் களைச்செடிகளை அகற்றி நல்ல பயிர்களை விளைவிப்பதைப் போல, இந்த லேப்டாப் மூலம் தீய பழக்கங்களை விடுத்து நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடவாசல் வட்டாட்சியர் இளங்கோவன், திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் செந்தில் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி