பிறகு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டன. சிவ வாத்தியங்கள் முழங்க கடங்கள் ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து விநாயகர் அருளை பெற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்