பக்ரைனில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற அபினேஷ், ஆண்கள் கபடி பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வடுவூர் கிராமத்தில் அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அபினேஷுக்கு மாலை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.