இதனால், தற்போழுது வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் வைக்கோலை வாங்கிச் செல்ல இந்த ஆண்டு போதுமான வியாபாரிகள் வரவில்லை. அதனால் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல்கள் அப்படியே உள்ளது. இதுகுறித்து விவசாயி பாலசுப்ரமணியன் கூறுகையில் "வைக்கோல் ஒரு கட்டிற்கு 50 ரூபாய் செலவாகும் நிலையில், இருபது ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்குகிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வயல்களிலேயே வைக்கோலை கொளுத்தி விடுகிறோம்" என்றும், அரசு நேரடியாக வைக்கோலை கொள்முதல் செய்யும் விதமாக வைக்கோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்