திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அவளிவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சுப்பிரமணியனுக்கு, அப்பகுதி வழியாகச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் உடனடியாக முதலுதவி அளித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மனிதாபிமான செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.