கிரீன் நீடா குறுங்காட்டில் உதிர்ந்து கிடந்த காய்ந்த இலைகளை சேகரித்து பத்து அடி நீளத்திற்கு படுக்கை அமைத்தனர். பின்பு அதன் மீது காய்ந்த மரக்குச்சிகளை பரப்பி மூன்றாவது அடுக்காக பசும் தளைகளை பரப்பி வைத்து அதன் மீது மண் தூவி, சாணிப்பால் தெளித்து இயற்கை உரப் படுக்கையை அமைத்தனர்.
இயற்கை உரப் படுக்கையை அமைத்த மாணவர்களிடம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு பேசுகையில், இயற்கை உரப்படுக்கை என்பது, விவசாய கழிவுகளை பயன்படுத்தி மண்புழுக்களின் உதவியுடன் உரம் தயாரிக்கும் ஒரு முறையாகும்.
மண்புழுக்கள் விவசாய கழிவுகளை உட்கொண்டு, அவற்றை உரமாக்கி வெளியேற்றுகின்றன. இயற்கை உரப் படுக்கையால் மண்புழு உரம், மண்ணின் துகள்களை ஒன்றிணைத்து, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துவதாக தெரிவித்தார். பயிற்சியின் நிறைவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.