வலங்கைமானில் அழுத மாணவனை உற்சாகப்படுத்திய ஈரோடு மகேஷ்

வலங்கைமானில் செயல்பட்டு வரும் சிபிஜி ஸ்ரீ சங்கரா பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் மற்றும் சின்னத்திரை தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 விழாவில் நடனமாடிய சிறுவன் ஒருவன் அழுதுகொண்டே ஸ்டெப்பை மறக்காமல் ஆடியது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. பாடல் முடிந்ததும் அவனை அருகே அழைத்து அவனுக்கு பாராட்டு தெரிவித்தார் ஈரோடு மகேஷ். மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி