திருவாரூர் ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தை ரத்து செய்து மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், 146 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி