திருப்பாம்புரம் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் இராகு கேது சன்னதியில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருப்பாம்புரத்தில் அமைந்துள்ளது இராகு கேது சன்னதி. 

தமிழகத்திலேயே இராகு கேது ஆகிய இரண்டு தெய்வங்களும் ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்து வருவது இந்த ஒரு தலத்தில் மட்டும் தான். இந்த நிலையில் இன்று மாலை இசைஞானி இளையராஜா வருகை தந்து இராகு கேது சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருக்கு ஆலயத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி