மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர் சோழராஜன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆர். பி. சிவம் நகர், டிப்போ சாலை, வ. உ. சி. சாலை, அரசு கல்லூரி போன்ற இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மன்னார்குடி நகர மன்ற தலைவர் சோழராஜன் இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி