ஜவஹர்லால் நேருவின் 136வது பிறந்த தினத்தையொட்டி, கண்டகிரயம் எக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் நேருவின் ஓவியத்தை வரைந்து, முகமூடி அணிந்து, கேக் வெட்டி, வண்ண பலூன்களுடன் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் க. தங்கபாபு, ஆசிரியர் சோமசுந்தரம், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் சரண்யா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கொண்டாட்டத்தின் மூலம் மாணவர்கள் நேருவின் பெருமைகளை அறிந்தனர்.