சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி நேற்று இரவு புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, நன்னிலம் அருகே தென்குடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் திருஞானசம்பந்தம் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.