அங்கு வந்த பாலமுருகன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாதவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை விலாவில் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.