வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக பிஎல்ஏ-2 எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆர். காமராஜ் எம்எல்ஏ வழங்கினார். முகவர்கள் தங்களது பணியில் உள்ள இடர்பாடுகளை தெரிவித்து, அவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் பெற வேண்டும் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முகவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.