திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த ட்ரைலர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரண்டு மரங்கள் மற்றும் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி, காமராஜர் என்பவரது வீட்டிலும் மோதி நின்றது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.