கூத்தாநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஆதாம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இந்த நிலையில் முகமது ஆதாமுடன் பேசுவதை அந்தப்பெண் நிறுத்திக்கொண்டார். இதனால் தனது உறவினர்கள் இருவருடன் முகமது ஆதாம் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். அப்போது பெண்ணின் சகோதரருக்கும் முகமது ஆதாமுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியர் சந்தோஷ்குமார் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முகமது ஆதாம் திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டார்.