நன்னிலம் அருகே தென்னச்சார் கிராமத்தில் தனியாக வசித்து வந்த மதன்ராஜ், மது அருந்தும் பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் மனமுடைந்து மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் உயிரிழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த மதன்ராஜின் இந்த முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.