கொரடாச்சேரி: கடைக்காரர்களை எச்சரித்த சுகாதார ஆய்வாளர்

நீடாமங்கலம் அருகே கொரடாச்சேரியில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கொரடாச்சேரி பகுதி சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பிரசாந்த், செயல் அலுவலர் தேவராஜ் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து கொரடாச்சேரி கடைத்தெருவில் ஆய்வு செய்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நெகிழி, குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது நெகிழிப் பொருட்கள் புகையிலை பொருட்கள் ஆகியவை வைத்திருந்த கடைகளில் அபராதம் விதித்து தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பொதுமக்களும் இளைய சமுதாயத்தினரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி