அப்போது மாவட்ட பிரதிநிதி மகேந்திரன் (மாற்றுத்திறனாளி) என்பவர் கேப்டன் விஜயகாந்த் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் இன்னும் எத்தனை ஆண்டு காலம் போனாலும் உங்கள் நினைவு எங்கள் இதயத்தில் எப்போதும் இருக்கும் எங்கள் இதயத்தில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரும் தமிழர் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார் கேப்டன். எங்களை விட்டு போயிட்டீர்களே என அழுது கொண்டு கேப்டன் விஜயகாந்த் புகழை கூறினார்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்று அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வில் தேமுதிக கட்சியின் நன்னிலம் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் ஒன்றிய பொருளாளர் அழகர்சாமி நன்னிலம் நகர செயலாளர் நசரத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், வர்த்தக சங்க தலைவர் செல் சரவணன், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.