இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அவருடைய காரின் கண்ணாடியை சில மர்ம நபர்கள் கல்வீசி காரை சேதப்படுத்தி உள்ளனர். இது சம்பந்தமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பரவை கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வாக்குறுதியின் படி கலைந்து சென்றனர்
இந்த நிலையில் வீட்டிலிருந்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரியவந்த நிலையில் திடீரென கழிவறை சென்று விட்டு வருவதாக கூறி தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை சாப்பிட்டு உள்ளார். கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் பூட்டை உடைத்து அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.