திருச்சி வெயிலுக்கு மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு

திருச்சி ஓயாமாரி சுடுகாட்டுக்கு பின்புறம் உள்ள ஜெயக்குமார் நகர் முல்காட்டில் மயங்கிய நிலையில் ஒரு மூதாட்டி கிடப்பதாக ஏப்ரல் 12ஆம் தேதி கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு மயங்கி நிலையில் இருந்து 65 வயது மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையை சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன்று ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மூதாட்டி உயிரிழந்தார். 
அதேபோல் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கோட்டை போலீசருக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்ற போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார். உயிரிழந்த இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி