மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டி கேட்ட இருவர் படுகொலை

மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமம் வடக்கு தெரு பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார், முவேந்தர், தங்கதுரை ஆகிய மூவரையும் கல்லூரி மாணவர் ஹரி சக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் இளைஞர்கள் இருவரையும் சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தினர். 

இதனால் இளைஞர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இளைஞர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், முவேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய தங்கதுரையை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி