சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

மயிலாடுதுறை மாவட்ட அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். இது குறித்து மருத்துவமனையில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி சரண் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி