மயிலாடுதுறை அருகே நாஞ்சில்நாடு பகுதியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான தகரகொட்டகை அமைக்கும் மரச் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.