திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவர் இன்று (பிப்.19) மன்னார்குடியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்குச் சென்றபோது, வடுவூர் அடிச்சேரி என்ற இடத்தில் ஒட்டிவந்த இருசக்கர வாகனம் சிக்னல் கம்பத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வடுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.