கிராமிய பாடல்கள் பாடி  நடவு பணியில் பெண் தொழிலாளர்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமபுரம் கிராமத்தில், சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக பெண் விவசாய தொழிலாளர்கள், உடல் சோர்வை போக்க கிராமிய பாடல்களைப் பாடியபடி நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூரில், 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை, தாளடி, சம்பா என மூன்று பருவ சாகுபடி மேற்கொள்ளும் இப்பகுதி விவசாயிகள், பருவமழையை நம்பி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தாளடி நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி