கூத்தாநல்லூர் அருகே விசாலாட்சிபுரம் கிராம மக்கள், சுமார் 8 ஆண்டுகளாக கிராமத்தின் அருகே இயங்கி வரும் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சிரமப்படுவதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.