திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடக்குவாட்டார் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை பொண்ணுகொண்டான் ஆற்றங்கரையில் புதிதாக கட்டி திறக்க இருந்த நிலையில், வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்தக் கடையை திறக்கக் கூடாது என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ஏற்கனவே இருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புதிய இடத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.