மன்னார்குடி வருவாய் வட்ட அலுவலக வாயிலில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு நிகரான அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கிராம உதவியாளர்கள் சங்க மன்னார்குடி வட்ட தலைவர் எஸ். கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட பொருளாளர் என். முத்துவேல், வட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோக், மகளிர் அணி அமைப்பாளர் கே. ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.