புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த 40 இந்திய ராணுவ வீரர்களுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்தில் கன் ஃபிட் உடற்பயிற்சி மையம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பள்ளி மாணவர்கள் யோகா மற்றும் சிலம்பப் பயிற்சி செய்தும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி