கம்பங்குடி ஆர்ச் பகுதியில் தியாகி நல்லகண்ணுவிற்கு அஞ்சலி

மன்னார்குடி அருகே கம்பங்குடி ஆர்ச் பேருந்து நிலையப் பகுதியில் மறைந்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நல்லகண்ணு அவர்களின் அரசியல் பயணம், தனிமனித ஒழுக்கம், எளிமை, போராட்டங்கள், இந்திய விடுதலைப் போரில் அவரது செயல்பாடுகள் குறித்து அனைத்து கட்சியினரும் பேசினர். தொடர்ந்து நல்லக்கண்ணுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி