திருவாரூர்: தந்தை படுகொலை.. கதறி அழுத மகள்

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் வீட்டிற்குள் புகுந்த 6 பேர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகன் என்பவரை அவரது மகள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்தனர். மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி கொலையை பார்க்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், "என் அப்பாவை விட்டுவிடுங்கள்" என்று அந்தச் சிறுமி கதறி அழுதுள்ளார்.எங்க அப்பா வேணும்.. எங்க அப்பா தான் என் உசுரு.." என மகள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே கண்ணீரை வரவழைத்தது.

தொடர்புடைய செய்தி